எதுவும் சரியாக போகவில்லை என்றால்..பேட் கம்மின்ஸின் இலக்கு
ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்குவது குறித்து அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
பேட் கம்மின்ஸ்
ஐபிஎல் 2026 தொடரில் SRH அணியில் விளையாட உள்ள பேட் கம்மின்ஸ் (Pat Cummins) இந்தியா வந்துள்ளார்.
அவர் சின்னசாமி மைதானத்தில் Warm-Up பயிற்சியின்போது லேசான ஓட்டப்பயிற்சிகளை மேற்கொண்டார்.
இடுப்புப் பகுதி அழுத்தப் பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் நிலையில், ஐபிஎல் 2026 தொடரின் பகுதியிலும், இறுதிப் போட்டியிலும் விளையாடுவதை இலக்காக நிர்ணயித்துள்ளதாக கம்மின்ஸ் தெரிவித்தார்.
பந்துவீசத் தொடங்கிவிட்டேன்
அவர் கூறுகையில், "நான் இன்னும் முதுகு காயத்தில் இருந்து மீண்டு வருகிறேன்; ஆனால் நிலைமை நன்றாக உள்ளது. நான் மீண்டும் வலைப்பயிற்சியில் பந்துவீசத் தொடங்கிவிட்டேன்" என்றார்.
எதுவும் சரியாகப் போகவில்லை என்றால், தொடரின் பிற்பகுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |