இந்திய அணியில் அவர் ஆபத்தானவர்! அவருக்கு எதிராக திட்டமிடுகிறோம் - கம்மின்ஸ்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஆபத்தான வீரர் என அவுஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 22ஆம் திகதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கு தயாராகும் வகையில் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) உட்பட சில வீரர்களுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் குறித்து கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ரிஷாப் பண்ட் எப்போதும் ஆட்டத்தை மிக விரைவாக நகர்த்தும் ஒருவர், எனவே சில வீரர்களுக்கு என நாங்கள் திட்டங்களை வைத்திருக்க வேண்டும். கடந்த முறை அவுஸ்திரேலியாவில் ரிஷாப் பண்ட் (Rishabh Pant) ஒரு நல்ல தொடரை விளையாடினார்.
அவர் களத்திற்கு செல்லும்போது ஆபத்தானவராக இருக்கக் கூடும் என்பது எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் முயற்சிப்போம். சில நல்ல திட்டங்களை உருவாக்குவோம். அவை நிறைவேறும் என்று நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |