சென்னைக்கு வர உள்ள நீர் வழி மெட்ரோ - எந்த பகுதியில் தெரியுமா?
சென்னையில் நீர் வழி மெட்ரோ கொண்டு வர CUMTA திட்டமிட்டு வருகிறது.
நீர் வழி மெட்ரோ
சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும்பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக, கேரள மாநிலம் கொச்சினில் உள்ளது போல், நீர் வழி மெட்ரோ திட்டத்தை கொண்டு வர ஆய்வு செய்து வருகிறது.
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு நீர் வழி மெட்ரோ தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இது, 76 கிலோமீட்டர் பரப்பளவில் 38 முனையங்கள் மற்றும் 16 வழித்தடங்களில் 78 மின்சார படகுகளுடன் செயல்பட்டு வருகிறது.
இதே போன்ற திட்டத்தை சென்னையில் கொண்டு வர, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்ட ஆணையம்(CUMTA) ஆய்வு செய்து வருகிறது.
ECR முதல் நேப்பியர் பாலம் வரை
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை(ECR) முதல் நேப்பியர் பாலம் வரை இந்த நீர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
முன்னதாக சென்னையில் உள்ள அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு ஆகியவற்றை இணைத்து படகு போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டது.
ஆனால், மாசுபாடு, ஆக்கிரமிப்புகள், ஆழமற்ற கால்வாய்கள் மற்றும் ஒழுங்கற்ற நீர் ஓட்டம் போன்ற சிக்கல்கள் இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு தடையாக இருந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் 1,078 கி.மீ. நீளமுள்ள தேசிய நீர்வழிப் போக்குவரத்து திட்டம் 4 இன் கீழ் இந்த நீர் மெட்ரோவை கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர்.
நதிகளை சீரமைப்பது, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களோடு இணைக்கும் வகையில் படகு நிலையங்களை அமைப்பது, மின்சார படகுகளை பயன்படுத்துவது குறித்த விரிவான திட்ட ஆய்வு அறிக்கை தயாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |