சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவுக்கு அரசு வெளியிட உள்ள செயலி

Chennai
By Karthikraja Aug 29, 2026 08:12 PM GMT
Report

CUMTA to launch app for autos and taxis in chennai: சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவு செய்ய அரசு தரப்பில் செயலி வெளியிடப்பட உள்ளது.

ஆட்டோ டாக்ஸிக்கு அரசு செயலி

சென்னையில் ஆட்டோ, டாக்சி போன்றவற்றை முன்பதிவு செய்து பயணிக்க Rapido, uber போன்ற தனியார் நிறுவனங்களின் செயலிகள் உள்ளன.

அதில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் நிறுவனங்கள் அதிக கமிஷன் தொகை வசூலிப்பதாகவும், தங்களுக்கு போதிய வருமானம் இல்லை எனவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவுக்கு அரசு வெளியிட உள்ள செயலி | Cumta To Launch App For Autos And Taxis In Chennai

இதே போல் பயணிகளும் சில ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்து வந்தனர். 

இன்ஸ்டாகிராமில் ரகசியம் சொல்வதாக கூறி ரூ.8.5 கோடி வசூல் செய்த மர்ம நபர்

இன்ஸ்டாகிராமில் ரகசியம் சொல்வதாக கூறி ரூ.8.5 கோடி வசூல் செய்த மர்ம நபர்

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய வீட்டு வசதித் துறை அமைச்சர் ராஜ்குமார், சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயணிகளுக்கு நியாயமான பயணக்கட்டணத்தை உறுதி செய்யவும் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். 

சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவுக்கு அரசு வெளியிட உள்ள செயலி | Cumta To Launch App For Autos And Taxis In Chennai

இந்த செயலி சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பால் (CUMTA) உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்.

இதில், பயணிகள் ஆட்டோவை முன்பதிவு செய்யவும், ஓட்டுநர்கள் முன்பதிவுகளை ஏற்கவும் வழிவகுக்கும்.

இதில் பயணத்தின் போது டிஜிட்டல் மீட்டர் இயக்கப்பட்டு, அதில் தூரம், நேரம் அதற்கான கட்டணம் காண்பிக்கப்படும்.

இதில், ஓட்டுநர்களுக்கு நேரடியாக ரொக்கமாகவோ/UPI மூலமாகவோ அல்லது செயலியில் உள்ள UPI தளங்கள் மூலமாகவோ பணம் செலுத்தலாம்.

மேலும், செயலி மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவோ பயணிகள் புகார்களை பதிவு செய்யலாம்.

எரிபொருள் விலைக்கு ஏற்ப, அரசால் அவ்வப்போது கட்டணங்களை புதுப்பிக்க முடியும்.

கட்டணங்களை உயர்த்த கோரிக்கை

போக்குவரத்துறை மானிய கோரிக்கையில் ஆட்டோ கட்டண உயர்வை அரசு அறிவிக்க வேண்டுமென ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக தவெக ஆட்சி அமைந்த பிறகு அரசு மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் இடையே 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 

சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவுக்கு அரசு வெளியிட உள்ள செயலி | Cumta To Launch App For Autos And Taxis In Chennai

இதில், முதல் 1.5 கிலோமீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.60ம், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.30ம் கோரியுள்ளனர்.

மேலும், நிமிடத்திற்கு ரூ.1 காத்திருப்புக் கட்டணமும், சாதாரண கட்டணத்தைப்போல் ஒன்றரை மடங்கு இரவு நேரக் கட்டணமும் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US