Curd Chutney: ஒரு கப் தயிர் இருந்தால் போதும்.., காரசாரமான சட்னி செய்யலாம்
பொதுவாக அனைவரின் வீட்டிலும் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு முறையாவது டிபனுக்கு சட்னி செய்யவேண்டியிருக்கும்.
வேலைக்கு அல்லது வெளியில் எங்கேயாவது அவசரமாக செல்லும்பொழுது 10 நிமிடத்தில் செய்யப்படும் இந்த தயிர் சட்னி ரொம்பவே உதவியாக இருக்கும்.
அந்தவகையில் இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் தயிர் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தயிர்- ½ லிட்டர்
- எண்ணெய் - தேவையான அளவு
- பெரிய வெங்காயம் - 2
- மிளகாய் வத்தல் - 5
- பூண்டு - 10
- மிளகாய் தூள் - ½ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து பின் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் இதில் கலந்து வைத்துள்ள தயிர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
அடுத்து இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இறுதியாக இதில் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான தயிர் சட்னி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |