தினமும் கொஞ்சம் தயிர் சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
தயிரை தினமும் உணவின் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்க பெறுகின்றது.
தயிரில் வாழும் பாக்டீரியாக்கள் குடலுக்கு நல்லது. இதனால் 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்.
தயிரில் விட்டமின் B-12 , கால்சியம் , பாஸ்பரஸ் , மெக்னீசியம் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.
தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னை இருப்போர் தினமும் ஒரு பவுல் தயிர் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தயிரில் இயற்கையான முறையில் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் உள்ளது. இது தயிரில் வாழும் பாக்டீரியாக்களினால் சுரப்பதால் குடலுக்கு நல்லது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிகும். குடல் ஆரோக்கியமா இருந்தாலே 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்.
தயிரில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் தலை முடி வளர்ச்சிக்கு நல்லது. தசைகள் இறுக்கமாகவும் தயிர் உதவும்.