இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை: அதிகரிக்கும் பதற்ற நிலை; ஊரடங்கு அமுல்!
இலங்கையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி கொழும்பின் புறநகர் மிரிஹானவில் உள்ள அதிபரின் இல்லம் அருகே 5,000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தி, காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டங்களை ஒடுக்க துணை ராணுவ பொலிஸ் பிரிவு, சிறப்பு அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது.
இலங்கையில் முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி இல்லம்! கடும் பதற்ற நிலை; பாதுகாப்பு அதிகரிப்பு
REUTERS/Dinuka Liyanawatte
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கு பல வாரங்களாக கடுமையான பற்றாக்குறை உள்ளது.
இலங்கையில் ஏற்கனவே மருந்து பற்றாக்குறையால் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருந்த அரசு மருத்துவமனைகளில் இப்போது இந்த மின்தடை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை, டீசல் கிடைக்காததால், நாட்டில் மக்கள் 13 மணி நேர மின்வெட்டால் பாதிக்கப்பட்டடுள்ளனர் மற்றும் சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.
REUTERS/Dinuka Liyanawatte
மின்தடை காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இலங்கையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.
வியாழன் பிற்பகுதியில் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு "மறு அறிவிப்பு வரும் வரை" நீடிக்கும் என்று ஐ.ஜி சி.டி.விக்ரமரத்ன தெரிவித்தார்.
REUTERS/Dinuka Liyanawatte
மிரிஹானா மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்குச் செல்லும் சாலையைத் தடுத்து நிறுத்திய முதல் வரிசை தடுப்புகளைத் தாண்டிச் சென்றபோது, அவர்கள் கற்களை எறிந்தும், கலவரத்தில் பொலிஸாருடன் மோதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் “கோட்டா வீட்டுக்குப் போ!” மற்றும் "கோட்டா ஒரு சர்வாதிகாரி" என்று கோஷமிட்டனர்.
REUTERS/Dinuka Liyanawatte
REUTERS/Dinuka Liyanawatte