நோய் தீர்க்கும் பவளமல்லி! இத்தனை அற்புத மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளதா?
இயற்கையான முறையில் சின்னச் சின்ன வியாதிகளுக்கு பக்க விளைவுகள் இல்லாத மருத்துவத்தையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். அவர்களுக்கு பவளமல்லி நல்ல தேர்வு என்கிறார் ஆயுர்வேத மருத்துவர்.
பவளமல்லி மலர்கள், இரவு மல்லிகை என்று அழைக்கப்படுகின்றன. இது பவளமல்லி மலர்கள் பகலினில் மலராமல், இரவுநேரத்தில் மட்டம் மலரும் தன்மை கொண்டது.
பவளமல்லி தாவரத்தின் வேர்கள் முதல் இலைகள் வரை ஒவ்வொரு பகுதியும் பல்வேறு சிறப்புப் பண்புகளையும், மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளன. இது ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
குறிப்பாக வயிற்றுத் தொந்தரவு, மூட்டுவலி, காய்ச்சல், தலைவலி, இரத்தப்போக்கு போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகின்றது. மற்றும் இன்னும் பல நோய்களை தீரக்க கூடியதாக உள்ளது.
அந்தவகையில் பவளமல்லியில் அடங்கியுள்ள மருத்துவப்பயன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பவளமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து.
- கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது.
- பவளமல்லி மரத்தின் வேரை மென்றுதின்றால் பல் ஈறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும்.
- விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது.
- பவளமல்லி விதையை பொடி செய்து அதை எண்ணெய்யில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்.
- பவளமல்லியை பெண்கள் தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை தீரும்.
- சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
- பவளமல்லி இலைகள் நோய் நீக்கியாக விளங்குகிறது.
பவளமல்லியின் இலைகளில் செய்யப்படும் கசாயம், பருவ காலத்தில் ஏற்படும் படர்தாமரை நோயையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது. வியர்வையை தூண்டக்கூடியது. காய்ச்சலை தணிக்க கூடியது.வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
- பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல்கள் அனைத்தும் விலகிப்போகும். இடுப்பு வலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்க கூடியதாக பயன்படுகிறது. பூஞ்சை காளான்களை போக்குகிறது.