நிகழ்கால பேட்ஸ்மேன்களில் இவருக்கு பந்து வீச நான் விரும்பவில்லை! வெளிப்படையாக கூறிய முரளிதரன்
நிகழ்கால பேட்ஸ்மேன்களில் தான் பந்து வீச விரும்பாத வீரரின் பெயரை இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் வெளிப்படையாக கூறியுள்ளார்.
ESPN-னின் 25Questions நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முரளிதரனிடம், நிகழ்கால பேட்ஸ்மேன்களில் நீங்கள் பந்து வீசி விரும்பாத வீரர் யார் என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த முரளிதரன், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி என கூறினார்.
அதேபோல், சிஎஸ்கே அணிக்காக விளையாடிய காலத்தில் தோனி அவரிடமிருந்து எத்தனை தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொண்டார் என கேட்கப்பட்டது.
இதற்கு, தோனி தன்னிடமிருந்து ஒரு வார்த்தை மேல் கற்றுக்கொள்ளவில்லை என முரளிதரன் கூறினார்.
Virat Kohli vs Muthiah Muralidaran
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 15, 2021
Who would win today? ? #25Questions
ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2010 வரை என 3 சீசன் சிஎஸ்கே அணிக்காக முரளிதரன் விளையாடியுள்ளார். சென்னைக்காக 40 போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நீங்கள் சந்தித்த பேட்ஸ்மேன்களில், யாருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமாக இருந்தது என கேட்கப்பட்ட கேள்விக்கு, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா என முரளிதரன் கூறினார்.