உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கறிவேப்பிலை சட்னி.., எப்படி செய்வது?
கறிவேப்பிலை செரிமானத்தை மேம்படுத்த, உடல் எடையைக் குறைக்க, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும், இது முடி வளர்ச்சி, நரம்பு மண்டல ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கறிவேப்பிலை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடலை பருப்பு- 2 ஸ்பூன்
- உளுந்து- 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 3
- பூண்டு- 5 பல்
- சின்ன வெங்காயம்- 15
- புளி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- தேங்காய் துருவல்- 5 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடலை பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் இதில் புளி, உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவைத்த கலவை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக, வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொட்டினால் கறிவேப்பிலை சட்னி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |