Curry Leaves For Grey Hair: நரைமுடிக்கு கருவேப்பிலை ஹேர்மாஸ்க்
60 வயதுக்கு மேலே தான் நரை முடி என்ற காலம்போய் தற்போது 20 வயதிலேயே நரைமுடி பிரச்சனைகள் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு மரபணு மாற்றம், அதிகப்படியான மனஅழுத்தம், அழகுசாதன பொருட்களின் பயன்பாடு என பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஊட்டச்சத்து குறைபாடும் முக்கிய காரணமாகிறது.
துரித உணவுகள், உடற்பயிற்சியின்மை என்பவையும் முக்கிய காரணமே. நரை முடி வந்துவிட்டால் உடனடியாக செயற்கை ரசாயன பொருட்கள் பக்கம் செல்லாமல் வீட்டிலேயே அதை சரிசெய்வதற்கான முறைகளை பற்றிதான் பார்க்க போகிறோம்.
நரைமுடிக்கு கருவேப்பிலை
கருவேப்பிலையில் பி வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன, இவை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கும் கருவேப்பிலை நரைமுடியை கருப்பாக மாற்றும் என நம்பப்படுகிறது, எனினும் இதற்கான அறிவியல் பூர்வமாக ஆதாரங்கள் எதுவும் இல்லை.
முழுமையாக நரைமுடியை கருப்பாகவில்லை என்றாலும் கருவேப்பிலையில் உள்ள அமினோ அமிலங்கள் தலைமுடியின் வேர்களை வலுப்படுத்துகின்றன.
இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் இயற்கையான நிறத்தை பராமரிக்கவும், பொலிவையும் தருகிறது.
கருவேப்பிலை ஹேர்மாஸ்க்
2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடாக்கி 15 முதல் 20 கருவேப்பிலை சேர்க்கவும். எண்ணெயின் நிறம் மாறிய பின்னர் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இந்த எண்ணெயை கொண்டு உச்சந்தலை முதல் மசாஜ் செய்து கொள்ளவும். 2 மணிநேரம் கழித்து தலைமுடியை அலசவும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு செய்யவும்.
