கருகருன்னு கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கருவேப்பிலை தொக்கு: ரெசிபி இதோ
இந்த கருவேப்பிலை தொகை இட்லி, தோசை, சூடு சாதம், சப்பாத்தி என அனைத்திற்கும் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
கருவேப்பிலையை சாப்பிடுவதால்அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வு, உடல் எடை குறைப்பு மற்றும் உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்றும்.
சத்துக்கள் நிறைந்த இந்த கறிவேப்பிலை தொக்கை தயாரித்து குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான கருவேப்பிலை தொக்கை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருவேப்பிலை- 1 கைப்பிடி
- கடுகு- 2 ஸ்பூன்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி- 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
- புளி- எலுமிச்சை அளவு
- பூண்டு- 30 பல்
- வரமிளகாய்- 2
- சின்ன வெங்காயம்- 10
- பெருங்காயம்- 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- வெல்லம்- 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலில் முதலில் 1 ஸ்பூன் கடுகு, 1 ஸ்பூன் வெந்தயம், 1 ஸ்பூன் கொத்தமல்லி வருத்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து கொள்ளவும்.
பின் அதே வாணலில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கழுவி காயவைத்து வைத்துள்ள கருவேப்பிலையை சேர்த்து வருத்து அதனையும் அந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
பின் வாணலில் 6 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு, வெந்தயம், பூண்டு, வரமிளகாய், சின்ன வெங்காயம், பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை பொடியை சேர்த்து வதக்கவேண்டும்.
இதனைத்தொடர்ந்து அதில் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
பின் அதில் மிளகாய்த்தூள், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கிளறி எண்ணெய் பிரிந்து வரும்வரை நன்கு கொதிக்கவைத்து இறஙகினால் ஆரோக்கியம் நிறைந்த கருவேப்பிலை தொக்கு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |