அடேங்கப்பா... தினமும் கறிவேப்பிலை தேநீர் குடித்து வந்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமாம்!
மக்கள் உணவில் பயன்படுத்தும் கறிவேப்பிலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
கறிவேப்பிலை மரம் பல நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. தலைமுடி முதல் சருமம் வரை அதன் நன்மைகள் ஏராளம்.
இப்படிப்பட்ட கறிவேப்பிலை தேநீரை குடித்து வந்தால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? வாங்க பார்ப்போம் -
கறிவேப்பிலை தேநீர் எப்படி செய்வது ?
தண்ணீரை கொதிக்க வைத்து, அதில், கறிவேப்பிலை இலைகளை போட்டு 7 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த தேநீரில் சர்க்கரையோ, நாட்டு சர்க்கரையோ சேர்க்காமல் அப்படியே தினமும் குடித்து வந்தால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
நன்மைகள்
1. தினமும் இந்த தேநீரை குடித்து வந்தால் ஒற்றை தலைவலி சரியாகும்.
2. உடல் எடை கிடுகிடுவென குறையும்.
3. சர்க்கரை நோய் அளவை கட்டுப்படுத்தலாம்.
4. பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) சரி செய்யும்.
5. ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவி செய்யும்.
6. தலைமுடி நரைக்காது.
கறிவேப்பிலையின் பயன்களைப் பற்றி பார்ப்போம் -
பேன் தொல்லை
கறிவேப்பிலையை நன்றாக அரைத்து அந்த பேஸ்ட்டை மோரில் சேர்த்து உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பேன் தொல்லை நீங்கும். தலை அரிப்புகளும் சரியாகும்.
வாய் புண்
கறிவேப்பிலையை கொஞ்சம் காய வைத்து, அதை மிக்ஸியில் அரைத்து, சிறிது தேன் சேர்த்து வாய் புண் இருக்கும் இடத்தில் இதை தடவினால் 3 நாட்களில் சரியாகிவிடும்.
குமட்டல்
கறிவேப்பிலை இலையை கழுவி, அதை சிறிது நெய்யிலில் வறுத்து எடுத்து, மென்று சாப்பிட்டு வந்தால் குமட்டல் சரியாகும்.
வாய் துர்நாற்றம்
கறிவேப்பிலையை நன்றாக கழுவி, அதை பச்சையாக வாயில் வைத்து 5 நிமிடங்கள் மென்று, அதன் பின் வாயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
சர்க்கரை நோயாளிக்கு
சர்க்கரை நோய் கட்டுக்குள் வர, அடிக்கடி கறிவேப்பிலையைப் பயன்படுத்தி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் இன்சூலின்ஸ் கட்டுப்படும்.
வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை மிக்ஸியில் அரைத்து, அந்த பேஸ்ட்டை ஒரு கிளாஸ் மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |