தலைமுடி கொட்டுவதை 10 நாட்களில் நிறுத்த! தலைக்கு எதுவும் தடவாதீங்க... இதை மட்டும் குடிங்க போதும்
தலைமுடி அதிகமா கொட்டுது! இந்த வார்த்தைகளை பலரும் தற்போதைய காலக்கட்டத்தில் கூறுவதை கேட்டிருப்போம். ஏனெனில் தலைமுடி உதிரும் பிரச்சினை இன்று பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய கவலையாக இருந்து வருகிறது.
இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகள் ஏராளம் விற்பனைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் மாதக் கணக்கில் பயன்படுத்தினாலும் கூட நமக்கு சரியான தீர்வு மட்டும் கிடைப்பதில்லை. தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு முக்கிய காரணம் சரியான சத்துள்ள உணவை நாம் எடுத்துக் கொள்ளாதது தான்.
இதற்கு சிறந்த தீர்வை கறிவேப்பிலை, நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி போன்ற இயற்கை பொருட்கள் கொடுக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எண்ணெயில் தலைமுடியின் வேர்க்கால்களை மசாஜ் செய்து வந்தால் போதிய போஷாக்கு கிடைக்கும்.
கறிவேப்பிலையை நீங்கள் எந்த அளவிற்கு உணவாக உள்ளுக்குள் கொள்கிறீர்களோ! அந்த அளவிற்கு தலைமுடி உதிர்வது கட்டுப்படும். கறிவேப்பிலையை இந்த முறையில் நீங்கள் ஜூஸ் செய்து குடித்தால் பத்தே நாட்களில் முடி உதிர்வது தடுக்கப்படுமாம்!
தயாரிக்கும் முறை
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை தண்ணீரில் நன்கு அலசி விட்டு மிக்சி ஜாரில் போட்டு கொள்ளுங்கள்.
அதனுடன் கால் டீஸ்பூன் – சீரகம், 3 டீஸ்பூன் – தயிர் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த விழுதுடன், தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். 2 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 2 சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். உடலில் இருக்கும் தேவையில்லாத சளி தேக்கத்தை கரைத்துவிடும். ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை சுத்தம் செய்யும்.
தலைப்பகுதியின் மண்டை ஓட்டில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டும். பத்து நாட்கள் மட்டும் தொடர்ந்து குடித்து பாருங்கள். மோசமான தலைமுடி உதிர்வு கூட சட்டென கட்டுப்பாட்டுக்குள் வரும்.