ராணியார் அணிந்த கிரீடம்... ஆண் வாரிசுகள் அணிந்தால் உயிருக்கே ஆபத்து: வெளிவரும் பகீர் பின்னணி
பாரசீக மொழியில் ஒளியின் மலை என வர்ணிக்கப்படும் கோஹினூர் வைரமானது சபிக்கப்பட்ட ஒன்று
மன்னர் ஷாஜகானின் சிம்மாசனத்தில் வைக்கப்பட்டது, அவர் சொந்த மகனால் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரித்தானிய அரச குடும்பத்து ஆண்கள் அனைவரும் தவிர்க்க விரும்பும் கிரீடம் ஒன்று இனி மன்னர் சார்லஸுக்கு சொந்தம் என தெரிய வருகிறது.
அரச குடும்பத்து ஆண்களுக்கு துரதிர்ஷ்டத்தைத் தரும் சபிக்கப்பட்ட கிரீடம் என்றே சிலர் அதை குறிப்பிடுகின்றனர். எலிசபெத் ராணியாரிடம் இருந்த பல கிரீடங்களில் ஒன்று, கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம்.
பாரசீக மொழியில் ஒளியின் மலை என வர்ணிக்கப்படும் கோஹினூர் வைரமானது சபிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறப்படுகிறது. இந்து துறவி ஒருவரின் கூற்றுப்படி, ஆண் வாரீசு எவரும் அந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிந்தால் அவர் உலகத்தை சொந்தமாக்கிக் கொள்வார், ஆனால் அதனால் ஏற்படும் அனைத்து துரதிர்ஷ்டங்களையும் அனுபவிக்கவும் நேரிடும் என குறிப்பிட்டுள்ளர்.
@getty
1628ல் கோஹினூர் வைரமானது முகலாய மன்னர் ஷாஜகானின் சிம்மாசனத்தில் வைக்கப்பட்டது, பின்னர் அவர் தனது சொந்த மகனால் சிறையில் அடைக்கப்பட்டார். 1739ல், ஈரானிய ஆட்சியாளர் நாதர் ஷா முகலாயர்கள் மீது படையெடுத்தார். ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் அத்துடன் கோஹினூர் வைரமானது கொள்ளையிடப்பட்டது.
நாதர் ஷா பின்னர் தமக்கு நெருக்கமான அதிகாரிகளாலையே படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், 18ம் நூற்றாண்டில் கோஹினூர் வைரமானது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் சிக்கியது. அவர்கள் அதனை விக்டோரியா ராணியாருக்கு பரிசளித்தனர்.
ஆனால் அதன் வடிவத்தில் ஏமாற்றமடைந்த ராணியார், அதனை இரண்டாக வெட்டி மீண்டும் வடிவமைக்க வைத்தார். இதனால் கோஹினூர் வைரத்தின் அளவில் மாறுதல் ஏற்பட்டது.
@getty
1902ல் பிரித்தானிய ராணியார் அலெக்ஸாண்ட்ரா கிரீடத்தில் குறித்த கோஹினூர் வைரமானது முதன்முறையாக பதிக்கப்பட்டது. மட்டுமின்றி விக்டோரியா ராணியாருக்கு பின்னர் மூன்று பெண்கள் குறித்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிந்துள்ளனர்.
மேலும், விக்டோரியா ராணியாருக்கு பின்னர் குறித்த கிரீடமானது, அரச குடும்பத்து உறுப்பினர்கள் அணியும் கிரீடங்களின் பட்டியலிலும் இல்லை. இதனால், குறித்த கிரீடமானது மன்னர் சார்லஸ் அணிந்துகொள்ள வாய்ப்பில்லை என்றே நம்பப்படுகிறது.
கடைசியாக அந்த கிரீடத்தை அணிந்தவர் முதலாம் எலிசபெத் ராணியார் எனவும், அதுவும் 1953ல் ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் பட்டமளிப்பு விழாவின்போது என்றே கூறப்படுகிறது.
தற்போது அந்த கிரீடமானது மன்னர் சார்லஸின் மனைவி கமிலா அணிய வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
கடைசியாக அந்த கிரீடம் 2002ல் ராணியார் முதலாம் எலிசபெத்தின் சவப்பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.