வெளி உலகுக்கு அதிகம் தெரியாத பிரித்தானிய மகாராணியாரின் கியூட் கொள்ளுப்பேரன்: அவர் எங்கே பிறந்தார் தெரியுமா?
மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்துக்கு 12 கொள்ளுப்பேரன்களும் பேத்திகளும் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவரின் பிறப்பின் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் உள்ளது.
மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்துக்கு 12 கொள்ளுப்பேரன்களும் பேத்திகளும் இருக்கிறார்கள்.
இளவரசர்கள் வில்லியம், ஹரியின் பிள்ளைகள் தவிர்த்து, அவர்களில் பெரும்பாலானோர் அதிகம் வெளி உலகுக்குத் தெரிவதில்லை.
அவர்களில் ஒருவர் லூகாஸ். மிகவும் கியூட்டான லூகாஸுக்கு அவரது கொள்ளுத்தாத்தாவான, அதாவது மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப்பை கௌரவிக்கும் வகையில் Lucas Philip Tindall என பெயரிடப்பட்டுள்ளது.
Image: PA
மகாராணியாரின் மகளான இளவரசி ஆன்னுடைய மகளான சாரா டிண்டலின் மகன்தான் இந்த லூகாஸ்.
லூகாஸின் பிறப்பில் ஒரு மறக்கமுடியாத சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. அது என்னவென்றால், சாரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல இயலாததால் வீட்டின் குளியலறையிலேயே லூகாஸை பிரசவித்தார் சாரா.
[
Image: Max Mumby/Indigo/Getty Images
இந்த லூகாஸ், மறைந்த மகாராணியாரின் பிளாட்டினம் விழாக் கொண்டாட்டங்களின்போதுதான் முதன்முறையாக வெளி உலகின் கவனம் ஈர்த்தார்.
லூகாஸ் தனது தந்தை மைக் டிண்டல், தாய் சாரா டிண்டல் ஆகியோருடன் வேடிக்கையாக நடனமாடும் காட்சி அப்போது பலரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
Image: PA
Lucas Tindall everyone: pic.twitter.com/vGIN8yUl8b
— Women of Windsor (@WomenofWindsor) June 5, 2022