குக் வித் கோமாளி சீசன் 6ல் இணையும் 4 புதிய கோமாளிகள்.. யார் யார் தெரியுமா?
தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி விளங்குகிறது.
முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி தற்போது 5வது சீசன் வரை நடந்து முடிந்துள்ளது.
கடந்த 4 சீசனாக நிகழ்ச்சியின் பிரபல நடுவரான செஃப் வெங்கடேஷ் பட் கடந்த சீசன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
இதேபோன்று கடந்த சீசனில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை வெளியேறியுள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 6 விரைவில் தொடங்க உள்ள நிலையில், புதியதாக நான்கு கோமாளிகள் இணைந்துள்ளனர்.
கானா பாடல்கள் மூலம் மக்களை கவர்ந்த பூவையார், யூடியூபில் பிரபலமாக இருக்கும் சர்ஜின், பிக்பாஸ் மூலமாக பிரபலமடைந்த சௌந்தர்யா மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலமாக கவனம் பெற்ற தோழி ஆகியோர் புதிய கோமாளிகளாக ஆறாவது சீசனில் இடம் பெறுகிறார்கள்.
இவர்களை தவிர்த்து ராமர், புகழ், சரத், சுனிதா, குரேஷி ஆகியோரும் இந்த சீசனில் பங்கேற்கின்றனர்.
இந்த சீசன் எப்போது தொடங்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
சில வாரங்களுக்கு முன்பு ஏப்ரல் இறுதிக்குள் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அறிவிப்பு தாமதமாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |