சுவிட்சர்லாந்திலும் உணவு நிறுவனம் ஒன்றின் மீது சைபர் தாக்குதல்
Cybercriminals have turned their attention to refrigeration systems in Switzerland: சைபர் குற்றவாளிகள், சுவிட்சர்லாந்திலுள்ள குளிர் சாதன அமைப்புகளை குறிவைத்துள்ளார்கள்.
பிரித்தானியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில், கடைகளிலுள்ள ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீஸர்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.
இந்நிலையில், சுவிட்சர்லாந்திலுள்ள உணவு நிறுவனம் ஒன்றும் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவு நிறுவனம் ஒன்றின் மீது சைபர் தாக்குதல்
சுவிட்சர்லாந்தில், Bernஇலுள்ள Lüthi’s Fleischwaren என்னும் மாமிசம் விற்பனை செய்யும் நிறுவனமே சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

தகவல் அறிந்ததும், உடனடியாக குளிர் சாதன அமைப்புகளை மைய மின் அமைப்புகளிலிருந்து துண்டித்த நிறுவன உரிமையாளர்கள், தற்காலிகமாக அந்த நிறுவனத்தை மூடியுள்ளார்கள்.
அனைத்து குளிர் சாதன அமைப்புகளும் சோதனைக்கு உபடுத்தப்பட்டுவரும் நிலையில், மீண்டும் அவை சரியாக இயங்கும் என்ற நிலை உறுதி செய்தபின், இம்மாதம் 20ஆம் திகதி நிறுவனத்தைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படி சுவிட்சர்லாந்தில் குளிர் சாதன அமைப்புகளை சைபர் குற்றவாளிகள் குறிவைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.