சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் ஓன்லைன் துன்புறுத்தல்: காரணம் என்ன? வெளியான அதிச்சியூட்டும் ஆய்வு தகவல்
சுவிட்சர்லாந்தில் ஓன்லைன் துன்புறுத்தல் மற்றும் சைபர் ஸ்டால்கிங் அதிகளவில் பரவி வருவதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
2021 ஆகஸ்ட் 2 முதல் 11 வரை ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் ஜேர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் உள்ள 18-65 வயதுடைய 4,000 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன்படி, 2018-ஆம் ஆண்டிலிருந்து துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 10.6% அதிகரித்துள்ளது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் 39% பேர் ஒருமுறையாவது துன்புறுத்தப்பட்டிருந்ததாக கூறியுள்ளனர்.
அதில், 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களில், கிட்டத்தட்ட பாதி பேர் துன்புறுத்தப்படுவதாகவும், 21% பேர் ஸ்டால்கிங் செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதில் கிட்டத்தட்ட பாதி வழக்குகள் பணியிடங்களில் நிகழ்ந்துள்ளன. கொடுமைப்படுத்துதல் விகிதங்கள் ஆண்களை விட பெண்களுக்கு 1.4 மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறாமை மற்றும் உடல் தோற்றம் ஆகியவை துன்புறுத்தலுக்கு மிகவும் பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
Photo: Katie Nesling | Dreamstime.com
Stalking என்பது ஒரு குறிப்பிட்ட நபரை நோக்கி இயக்கப்படும் தேவையற்ற நடத்தையின் வடிவமாக வரையறுக்கப்படுகிறது - இது அந்த நபரின் வழக்கத்தை மாற்றுகிறது அல்லது அவருக்கு அதிகப்படியான பயம், பதட்டம் அல்லது ஆபத்தை ஏற்படுத்துகிறது.
மீண்டும் மீண்டும் வரும் தேவையற்ற தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், செய்திகள் போன்றவை சைபர் ஸ்டால்கிங் நடத்தைகளின் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
Mobbing (ஒரு தனிநபரை ஒரு குழுவால் கொடுமைப்படுத்துதல்) மற்றும் Cyber Mobbing ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாக சுயமரியாதை இழப்பு, obsessive-compulsive disorders பிரச்சினைகள் மற்றும் ஆல்கஹால் அல்லது பிற போதைப் பொருட்களின் நுகர்வு அதிகரித்தது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பேரில் ஒருவர் தற்கொலை பற்றி யோசிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதில் பணியிடங்களில் முதலாளிகளின் பங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Mobbing மற்றும் சைபர்-ஸ்டாக்கிங்கால் பாதிக்கப்பட்டவர்கள், இயல்பாக வேலை செய்யாதவர்களை விட சராசரியாக 5 நாட்கள் கூடுதலாக வேலை செய்யாமல் இருந்துள்ளனர். மேலும் அவர்கள் இரு மடங்கு விகிதத்தில் வேலைகளை மாற்றிக்கொண்டுள்ளனர்.
ஜேர்மனியின் 'Alliance against Cyberbullying' குழு கடந்த வியாழன் அன்று Mobbing and cyber-mobbing among adults என்ற தலைப்பில் இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது.