வாட்ஸ்அப்பில் வரும் இந்த லிங்கை தொடாதீங்க! சைபர் கிரைம் எச்சரிக்கை
TATA Motors 15ஆம் ஆண்டு என வாட்ஸ்அப்பில் வரும் லிங்கை தொட வேண்டாம் என சைபர் கிரைம் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
Pink Whatsapp
பிங்க் வாட்ஸ்அப் (Pink whatsapp) என்ற பெயரில் வரும் லிங்கை தொட வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'TATA Motors 15ஆம் ஆண்டு என்று வருகின்ற லிங்கை தொட வேண்டாம். அந்த லிங்கை கிளிக் (Click) செய்தால் உங்களுடைய மொபைல் போன் மிக எளிதில் ஹேக் செய்யப்பட்டு உங்களுடைய வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் திருடப்படும்.
மேலும், உங்களுடைய மொபைல் போனும் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும். பிங்க் வாட்ஸ்அப் அல்லது உங்களுக்கு சம்பந்தமில்லாத அல்லது தேவையில்லாத நபர்கள் அனுப்பும் எந்த லிங்கையும் நீங்கள் கிளிக் செய்ய வேண்டாம்.
அவ்வாறு Click செய்யும்பட்சத்தில் APK File உங்கள் மொபைல் போனில் Install செய்யப்பட்டு, உங்கள் தகவல்கள் திருடப்பட்டுவிடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |