வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் கரையை கடந்தது- சென்னை வானிலை மையம்
Cyclone akvan crossed coast- வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் ஒடிசா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய அக்வான் தீவிர புயல், இன்று காலை புயலாக வலுவிழந்தது.
தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த இந்த புயல், இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் கோபால்பூர் அருகே கரையைக் கடந்தது.
இதையடுத்து, அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
இதற்கிடையில், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |