வங்கக்கடலில் தீவிரப் புயலாக வலுப்பெற்ற அக்வான்.., நாளை கரையை கடக்கும்
Cyclone Akwan Intensifies to Severe Cyclonic Storm- மத்திய வங்காள விரிகுடாவில் நிலவும் அக்வான் புயலானது தீவிரப் புயலாக வலுப்பெற்றது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடலில் நிலவிய அக்வான் புயல் மேலும் வலுப்பெற்றது.
தீவிரப்புயலாக வலுப்பெற்ற அக்வான் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை மிகத்தீவிரப்புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அக்வான் புயல் ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரைப்பகுதிகளில் நெல்லூருக்கும் விசாகப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்க உள்ளது.
தீவிர புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

தீவிரப்புயலாக வலுப்பெற்ற அக்வான் புயல் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்கிறது.
வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் சென்னையில் இருந்து 580 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
மேலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு-தென்கிழக்காக 610 கி.மீ. தொலைவிலும், கோபால்பூரில் இருந்து (ஒடிசா) தெற்கே 730 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |