வங்கக்கடலில் உருவானது அர்னாப் புயல்.., அதி தீவிர புயலாக கரையை கடக்கும்
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உருவானது அர்னாப் புயல்
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு "அர்னாப்" என பெயரிடப்பட்டுள்ளது.
மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகரும் அர்னாப் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தீவிர புயலாகவும், பின்னர் மிக தீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளது.

ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே புதன்கிழமை அதிகாலை புயல் கரையைக் கடக்கக்கூடும்.
அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அர்னாப் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை பாதிப்பு இருக்காது எனினும், டெல்டா மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |