வங்கக்கடலில் அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகும் பெங்கல் புயல்.., வானிலை மையத்தின் புதிய எச்சரிக்கை
வங்கக்கடலில் அடுத்த 3 மணி நேரத்தில் பெங்கல் புயல் உருவாகிறது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவிழந்தது.
தற்போது, சென்னைக்கு தென் கிழக்கே 470 கி.மீ, தொலைவில் நிலை கொண்டு உள்ளது. நாளை மாலைக்குள் படிப்படியாக வலுவை இழந்துவிடும் என வானிலை மையம் கூறியிருந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என சென்னை வானிலை மையம் திட்டவட்டமாக கூறியிருந்தது.
இந்நிலையில், தற்போது, அடுத்த 3 மணி நேரத்தில் பெங்கல் புயல் உருவாகிறது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது.
அடுத்த 3 மணி நேரத்தில் பெங்கல் புயல் உருவாகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ30) காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது.
புயல் கரையைக் கடக்கும் போது 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேலும், வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது" என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |