சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் - எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன?

Chennai TN Weather Thanjavur trichy Cyclone Fengal
By Kirthiga Nov 30, 2024 06:13 AM GMT
Report

பெங்கால் புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை அதிகரித்து வருவதோடு, பெங்கால் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் எனவும் இந்திய ஆய்வு மையும் தெரிவித்துள்ளது. 

புயல் எப்போது கரையை கடக்கும்?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று 21 செ.மீ வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டள்ளது.  

மேலும் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று மதியம் புயலாக உருவெடுத்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  

மேலும் இதனால் 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் - எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன? | Cyclone Fengal When Landfall What Rainfall

குறித்த புயலானது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் ஆகிய பகுதியின் ஊடாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் 1 வரை இடி மின்னலுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைக்கும் கல்லூரிக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  

சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் - எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன? | Cyclone Fengal When Landfall What Rainfall

மேலும் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் மற்றும் பரீட்சைகள் இந்நேரத்தில் நிகழ்த்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிற மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புயல் கரையைக் கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப்போக்குவரத்து சேவை இன்று பிற்பகல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவை தவிர வேறு பணிகளுக்காக வீட்டில் இருந்து வெளியில் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஜே.சி.பி இயந்திரங்களும் 806 படகுகளும் மோட்டார் பம்புகளும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சுழற்றி அடிக்கப்போகும் பெங்கால் புயல் - எப்போது கரையை கடக்கும், இன்றைய நிலவரம் என்ன? | Cyclone Fengal When Landfall What Rainfall

மேலும் நாளை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிப்புரியும் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை பூங்காக்கள் மற்றும் கடற்கரைப்பகுதிகள் கனமழையால் மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம்

14 Nov, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Montreal, Canada

23 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம்

23 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வற்றாப்பளை, Ajax, Canada

18 Oct, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US