வங்கக்கடலில் உருவாகிறது மாந்தா புயல்.., 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
வங்கக்கடல் பகுதியில் வருகிற 27ஆம் திகதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு தென்கிழக்கு வங்ககடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தெளிவாகத் தெரியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது வருகிற அக்டோபர் 26ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அதேபோல் 27ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்தால் பரிந்துரைக்கப்பட்ட மாந்தா புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
மாந்தா புயலால் அக்டோபர் 27ஆம் திகதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |