நாளை உருவாகிறது சென்யார் புயல்.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
ஒரே சமயத்தில் நிலவும் 3 சுழற்சிகளால், நாளை (புதன்கிழமை) வங்கக்கடலில் புயல் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
ஒரே சமயத்தில் நிலவும் 3 சுழற்சிகளால், நாளை வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘சென்யார்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்யார் என்றால் அரபு மொழியில் சிங்கம் என்று அர்த்தம் ஆகும்.

இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்த புயல் சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருகிற 29ஆம் திகதி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் இயல்பை விட குறைந்த அளவு மழை பதிவாகி உள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அந்தமான், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு வருகிற 29ஆம் திகதி வரையில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |