130 கி.மீ அப்பால் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல்: சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை
மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள புயல், தற்போது சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் தற்போது 14 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று மாலை 5 மணியளவில் இந்த மிக்ஜாம் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட தமிழகத்தின் அருகே புயல் மையம் கொண்டு இருப்பதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணி வரை மிதமான கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
x/Siddu
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |