ரூ.167.2 கோடிக்கு வாங்கப்பட்ட ஓவியம் - இந்திய கலைத்துறையில் சாதனை
இந்திய ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஓவியம் ரூ.167.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.
ரூ.167.2 கோடிக்கு வாங்கப்பட்ட ஓவியம்
பிரபல ஏல நிறுவனமான Saffronart நிறுவனம், மும்பையில் வசந்தகால ஏலத்தை நடத்தியது.
இந்த ஏலத்தில் பிரபல இந்திய கலைஞரான ராஜா ரவிவர்மாவின் ஓவியம் ரூ.167.2 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மா, கடந்த 1890 ஆம் ஆண்டு, யசோதா மற்றும் கிருஷ்ணா என்று பெயரிடப்பட்ட வண்ண ஓவியம் ஒன்றை வரைந்தார். இதில் அவரின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.

இந்த 35 x 28.25 இன்ச் எண்ணெய் ஓவியம், யசோதை பசுவிடம் பால் கறப்பதையும், குழந்தை கிருஷ்ணன் பின்னால் இருந்து ஒரு கிண்ணத்தில் பாலை எடுக்க முயற்சிப்பதையும் இந்த ஓவியம் சித்தரிக்கிறது.
இந்த ஓவியத்தை புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் சைரஸ் எஸ்.பூனாவாலா வாங்கியுள்ளார்.

ரூ.80 கோடிக்கு செல்லும் என மதிப்பிடப்பட்ட இந்த ஓவியம் ரூ.167.2 கோடிக்கு வாங்கப்பட்டு, அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்தியரின் ஓவியம் என்ற சாதனையை படைத்துள்ளது.
முன்னதாக, எம்.எஃப். ஹுசைனின் 'பெயரிடப்படாத (கிராம் யாத்ரா)' ஓவியத்தை , கடந்த ஆண்டு டெல்லியைச் சேர்ந்த கிரண் நாடார் ₹118 கோடிக்கு வாங்கியதே சாதனையாக கருதப்பட்டது.
இது குறித்து பேசிய சைரஸ் பூனாவாலா, "புகழ்பெற்ற ராஜா ரவி வர்மாவின் யசோதை மற்றும் கிருஷ்ணர் ஓவியத்தை கையகப்படுத்தி, பாதுகாத்து, பராமரிக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த தேசியப் பொக்கிஷம் அவ்வப்போது பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |