மணிக்கு 414 கி.மீ. வேகத்தில் சென்ற Bugatti கார்! கோடீஸ்வரரை எச்சரித்த ஜேர்மன் அரசு

Germany Warning Viral video Czech millionaire Bugatti Chiron Radim Passer
By Ragavan Jan 21, 2022 11:56 PM GMT
Report

ஜேர்மனியில் உள்ள ஒரு பொது நெடுஞ்சாலையில், தனது Bugatti Chiron சூப்பர் காரில் மணிக்கு 414 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச்சென்ற செக் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரை ஜேர்மன் அரசு எச்சரித்துள்ளது.

செக் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர், தனது அதிசக்தி வாய்ந்த Bugatti Chiron ஸ்போர்ட்ஸ் காரை பொது நெடுஞ்சாலையில் மணிக்கு 414 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றதற்காக ஜேர்மனியின் போக்குவரத்து அமைச்சகத்தால் விமர்சிக்கப்பட்டார்.

பெர்லின் மற்றும் ஹானோவர் இடையே ஜேர்மனியின் A2 ஆட்டோபான் பகுதியில் கோடீஸ்வரர் Radim Passer தனது Bugatti Chiron காரை வேகமாக ஓட்டும் வீடியோ இந்த மாத தொடக்கத்தில் YouTube-ல் வெளிவந்தது.

இந்த ஸ்டண்ட் கடந்த ஆண்டு 10 கிலோமீட்டர் நேராக அமைந்துள்ள முழு நீளத்திலும் தெரியக்கூடிய ஒரு மூன்று வழி நெடுஞ்சாலையில் படமாக்கப்பட்டது என்று Passer கூறினார்.

அந்த வீடியோவில், கார் நெடுஞ்சாலையில் பல வாகனங்களை கடந்து செல்வதைக் காணலாம். அந்த வீடியோ அந்தி நேரத்தில் படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.


அதில் "எங்களால் மணிக்கு 414 கிமீ வேகத்தை எட்ட முடிந்தது, பாதுகாப்பு மற்றும் நல்ல சூழ்நிலைகளுக்காக கடவுளுக்கு நன்றி!" என்று பாஸர் கூறினார்.

ஜேர்மனியின் பெரும்பாலான ஆட்டோபான் சாலைகளில் வேக வரம்பு இல்லை.

ஆனால் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், சாலைப் போக்குவரத்தில் சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு எந்தவொரு ஆபத்தை விளைவிக்கும் நடத்தையையும் நிராகரிக்கப்படும் என கூறியது.

மணிக்கு 414 கி.மீ. வேகத்தில் சென்ற Bugatti கார்! கோடீஸ்வரரை எச்சரித்த ஜேர்மன் அரசு | Czech Millionaire Bugatti Chiron Germany VideoPhoto: Forbes

"அனைத்து சாலைப் பயனர்களும் சாலைப் போக்குவரத்து விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்," என்று ஜேர்மனியின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் முதல் ஷரத்தை மேற்கோள் காட்டி, "போக்குவரத்தை பயன்படுத்தும் எவரும் வேறு யாருக்கும் தீங்கு விளைவிக்காத, தடையை உண்டாக்காத அல்லது சிரமத்திற்கு உள்ளாகாத அல்லது ஆபத்து அல்லாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்" என எச்சரித்தது.

சாரதிகள் "வாகனம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்கும் அளவுக்கு வேகமாக மட்டுமே ஓட்ட வேண்டும்" என்றும் சட்டம் கூறுகிறது என்றும் அமைச்சகம் குறிப்பிட்டது.

Radim Passer, 6.6 பில்லியன் செக் கிரௌன்கள் (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 6,215 கோடி) சொத்துக்களுடன், செக் குடியரசின் 33-வது பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Gallery
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US