சிரித்த முகத்தை மட்டுமே காட்டியவர்.., முதல்முறையாக அழுதபடி வீடியோ வெளியிட்ட துருக்கி பிரபலம்

Viral Video Turkey Turkey Earthquake
By Ragavan Feb 10, 2023 03:29 PM GMT
Report

சமூக வலைத்தளங்களில் சிரித்த முகத்துடன் சமைத்து மிகவும் பிரபலமான துருக்கிய சமையல்காரர், இப்போது முதல்முறையாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

துருக்கிய சமையல்காரர்

CZN Burak என்று அழைக்கப்படும் Burak Özdemir ஒரு துருக்கிய சமையல்காரர் ஆவார், அவர் துருக்கியில் சொந்தமாக உணவகம் நடத்திவருகிறார். பல்வேறு துருக்கிய மற்றும் சிரிய உணவு வகைகளை சமைக்கும் அவரது தனித்துவமான முறையின் காரணமாக அவர் பிரபலமடைந்தார்.

பெரிய அளவிலான உணவைத் தயாரிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவர் புகழ் பெற்றார். கேமராவை மட்டும் பார்த்து எப்போதும் சிரித்த முத்தத்துடன் உணவு தயாரிப்பதில் பெயர் பெற்றவர்.

சிரித்த முகத்தை மட்டுமே காட்டியவர்.., முதல்முறையாக அழுதபடி வீடியோ வெளியிட்ட துருக்கி பிரபலம் | Czn Burak Cries First Time Turkey Earthquake

புராக் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களையும், இன்ஸ்டாகிராமில் 44.8 மில்லியன் பின்தொடர்பாலர்களையும் கொண்டுள்ளார்.

உதவி கோரியுள்ளார்

அவர் தற்போது துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரியுள்ளார். அவர் துருக்கி முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று சோகத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு உணவு மற்றும் பொருட்களை விநியோகித்தார்.

காட்டுத்தீ போல வைரலான அந்த வீடியோவில், அவர் ஆறுதல் கூற முடியாமல் அழுது புலம்புவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கோருவதையும் காணலாம்.

இவரின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் மற்றும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர். கருத்துப் பிரிவில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உறுதிமொழி எடுப்பதையும் காணமுடிகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அழிவுகளின் பல்வேறு வீடியோக்களை CZN பகிர்ந்துள்ளது. துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவியதற்காக நெட்டிசன்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர், மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் உதவியை வழங்க மற்றவர்களை ஊக்குவிக்கும் அவரது முயற்சிகளையும் இப்போது பாராட்டுகிறார்கள்.

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 21,000 பேர் உயிரிழந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.


மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US