முன்னாள் மனைவி மீது இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு வழக்கு! நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு
முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி இசையமைப்பாளர் டி.இமான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவருக்கும் மோனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோனிகாவை சட்டரீதியாக பிரிந்துவிட்டதாக சமீபத்தில் இமான் அறிவித்தார்.
இந்நிலையில் குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து ஏமாற்றி புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதோடு விசாரணையானது ஜூன் 9ஆம் திகதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.