சிவகார்த்திகேயன் மேல் தப்பில்லை! உன் அப்பாவை கொன்னுடுவோம்னு மிரட்டினார் இமான் - முதல் மனைவி பரபரப்பு பேட்டி
இசையமைப்பாளர் டி.இமான் தன்னை மிரட்டி 46 நாட்களில் விவாகரத்து பெற்றதாக முதல் மனைவி மோனிகா தெரிவித்துள்ளார்.
டி.இமான் நேர்காணல்
பிரபல தமிழ் இசையமைப்பாளர் டி.இமான் அளித்த நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக கூறியது திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அவர் என்ன செய்தார் என்பதை வெளிப்படையாக கூறினால் தன் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்று இமான் குறிப்பிட்டது பல அனுமானங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த நிலையில் இமானின் முதல் மனைவியான மோனிகா பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
46 நாட்களில் விவாகரத்து
அவர் இமானுடனான விவாகரத்து குறித்து கூறுகையில், 'பொதுவாக குடும்ப நண்பர்கள்னு இருந்தா, நண்பரோட குடும்பம் பிரியக்கூடாதுன்னுதானே நினைப்பாங்க? அதைத்தான் சிவகார்த்திகேயனும் செய்தார். இதுல அவர் மேல என்ன தப்பு இருக்கு? ஒரு வருசத்துக்கு முன்னாடி பொண்ணையெல்லாம் ரெடியா பார்த்து வெச்சிட்டுத்தான், இமான் எனக்கு விவகாரத்தே கொடுத்தார்.
நான் முடியாதுன்னு சொன்னதுக்கு, அரசியல்வாதிகளை வெச்சு உங்கப்பாவைக் கொன்னுடுவோம்னு மிரட்டல் எல்லாம் கொடுத்து 46 நாட்களிலேயே விவாகரத்தும் வாங்கினார்' என தெரிவித்துள்ளார். மோனிகாவின் இந்த நேர்காணல் இமான் விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |