இலங்கை லீக் தொடரில் புதிய சாதனை படைத்த இருவர்!
லங்கா பிரீமியர் லீக் தொடரில் தனுக டபாரெ மற்றும் நுவனிடு பெர்னாண்டோ கூட்டணி 113 ஓட்டங்கள் விளாசியது.
காலே அணி வெற்றி
பல்லேகெல்லேவில் நடந்த லங்கா பிரீமியர் லீக் தொடர் போட்டியில், காலே கிளாடியேட்டர்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கண்டி அணியை வீழ்த்தியது.
முதலில் ஆடிய காலே அணி 6 விக்கெட்டுக்கு 153 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க வீரர் தனுக டபாரெ 70 (51) ஓட்டங்களும், நுவனிடு பெர்னாண்டோ 56 (50) ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய கண்டி அணி 7 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
A brilliant recovery by Galle Gladiators, led by two talented youngsters - Thanuka Dabare and Nuwanidu Fernando ?#WinTogether #LPLT20 #LPL2022 pic.twitter.com/z99vpb0Gkc
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) December 12, 2022
சாதனை பார்ட்னர்ஷிப்
இந்தப் போட்டியில் 5வது விக்கெட்டுக்கு கைகோர்த்த தனுக டபாரெ - நுவனிடு பெர்னாண்டோ கூட்டணி 87 பந்துகளில் 113 ஓட்டங்கள் குவித்தது. லங்கா பிரீமியர் லீக் தொடரில் இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
சர்வதேச போட்டிகளில் விளையாடாத இருவர் இந்த சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகன் விருதை தனுக டபாரெ தட்டிச் சென்றார்.
THE FUTURE IS HERE! ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) December 12, 2022
This is the highest partnership by two uncapped players for any wicket in LPL history.
Thanuka Dabare (52) | Nuwanidu Fernando (56)#LPLT20 #LPL2022 #WinTogether pic.twitter.com/q9qoUVoSMa
இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.