புற்றுநோய் அபாயம்... சில இந்திய நிறுவன தயாரிப்புகள் மீது குவியும் புகார்கள்
இந்திய நிறுவனம் ஒன்றின் துணை நிறுவனங்கள் மீது, அவற்றின் சில தயாரிப்புகள் புற்றுநோய்க்கு காரணமாக அமைவதாக புகார்கள் எழுந்துள்ளன.
புகாருக்குள்ளாகியுள்ளது எந்த நிறுவனம்?
இந்திய நிறுவனமான டாபர் நிறுவனத்தின் கூந்தலை நேராக்க உதவும் தயாரிப்புகள் சிலவற்றிலுள்ள ரசாயனங்கள், புற்றுநோயை உருவாக்குவதாக கனடா மற்றும் அமெரிக்காவில் புகார்கள் எழுந்துள்ளன.
பிரச்சினைக்குள்ளாகியுள்ள டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள், Namaste Laboratories LLC (Namaste), Dermoviva Skin Essentials Inc. (Dermoviva) மற்றும் Dabur International Ltd. (DINTL) ஆகிய நிறுவனங்கள் ஆகும்.
என்ன பிரச்சினை?
கனடா மற்றும் அமெரிக்காவில், டாபர் நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்புகளை பயன்படுத்தியோர், சூலகப் புற்று (ovarian cancer) மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு (uterine cancer) ஆளாகியுள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த தயாரிப்புகளுக்கு எதிராக சுமார் 5,400 வழக்குகள் பதிவாகியுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்குவதாக அமைந்துள்ளது.
இந்த தயாரிப்புகளில், சுருள் கூந்தலை நேராக்குவதற்காக methylene glycol என்னும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதாம். இந்த மெத்திலீன் கிளைக்கால், பார்மால்டிஹைடு என்னும் ரசாயனத்தை வெளியிடக்கூடியது. இந்த ஃபார்மால்டிஹைடு மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |