கனடாவில் 7 வயது சிறுமியை கடத்திச் சென்ற தந்தை: அவர் கூறும் காரணம்
கனடாவில் தடுப்பூசி மறுப்பாளரான தந்தை ஒருவர் தமது 7 வயது மகளை, தாயாரிடம் இருந்து கடத்தி சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில், குறித்த சிறுமியின் தாயார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமது முன்னாள் கணவரால் 7 வயதேயான மகள் கடத்தப்பட்டதாக கூறும் Mariecar Jackson, இதுவரை தமது மகள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
7 வயதான சிறுமியை இவ்வாறு மறைவாக வைத்திருப்பது பொருத்தமான செயல் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக சிறுமி சாராவுக்கு தடுப்பூசி அளிக்க அவரது தாயார் விரும்பியுள்ளார். ஆனால் தடுப்பூசி மறுப்பாளரான அவரது தந்தை அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், கடந்த நவம்பர் மாதம் சிறுமி சாராவை அழைத்து சென்றவர் திரும்ப ஒப்படைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
சமீபத்தில் ஊடக விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட அந்த தந்தை, தடுப்பூசிக்கு எதிராக தமது கருத்துகளை முன்வைத்துள்ளார். அதே வேளை, குறித்த சிறுமியும், தடுப்பூசி டி.என்.ஏ அமைப்பை மாற்றிவிடும், அதனால் நம்புவதாக இல்லை எனவும், தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நாளடைவில் பெருந்துயரமாக அது மாறக் கூடும் எனவும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அது கொல்லும் என அந்த ஊடக விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாக மட்டுமே Saskatchewan பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சிறுமியின் தாயார் Mariecar Jackson தெரிவிக்கையில், தன் மகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால் சிறுமி பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்பதே தம்முடைய முக்கிய கவலையாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லவும், நீதிபதி முடிவு செய்ய அனுமதிக்கவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022