குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... தந்தை மற்றும் மகளின் முதல் புகைப்படம் வெளியானது
ஸ்கொட்லாந்தின் West Calder பகுதியின் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகளின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
நடுங்க வைக்கும் சம்பவம்
West Calder பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகளின் பெயர் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். 36 வயதான Mark Gordon மற்றும் அவரது 6 வயது மகள் Hope ஆகியோர் செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் வலுக்கட்டாயமாக குடியிருப்புக்குள் நுழைந்த நிலையிலேயே இந்த நடுங்க வைக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. திங்களன்று சுமார் 4 மணியளவில் தொடர்புடைய குடியிருப்புக்கு விசாரிக்கும் பொருட்டு பொலிசார் சென்றுள்ளனர்.
ஆனால் அந்த குடியிருப்பு உள்ளிருந்து பூட்டப்பட்ட நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். சிறுமி பாடசாலைக்கு செல்ல தவறியதை அடுத்தே குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தந்தையும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். திங்களன்று அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் பொலிசார் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
யாருடன் பழகாதவர்
இதுவரையான விசாரணையில், இச்சம்பவத்தில் மூன்றாவது நபருக்கு தொடர்பில்லை என்றே தெரிய வந்துள்ளது என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகே குடியிருக்கும் அனைவரிடத்திலும் பொலிசார் தகவல் சேகரித்துள்ளனர். சுமார் ஓராண்டு காலமாக அப்பகுதி குடியிருப்பில் அவர்கள் தங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Mark Gordon அப்பகுதியில் யாருடன் பழகாதவர் என்பதால் மேலதிக தகவல் ஏதும் தெரியவில்லை என்றே அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |