குழந்தையை அடித்தே கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தியர் இவர்தான்: மனைவியைக் காப்பாற்ற கடும் முயற்சி
லண்டனில், குழந்தையின் கன்னத்தைத் தாய் கடித்ததாகவும், குழந்தையை தந்தை அடித்தே கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், தந்தையின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
மர்மமான முறையில் உயிரிழந்த குழந்தை
தங்கள் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொலை செய்ததாக லண்டனில் வாழும் இந்திய தம்பதியரான ரிங்கல்பென் ப்ரஜாபதி (Rinkalben Prajapati, 24), க்ருணால் ப்ரஜாபதி (Krunal Prajapati, 27) தம்பதியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தம்பதியரின் மகள் ஹேஸல் (Hazel), பிறந்து 11 வாரங்களே ஆன நிலையில், 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தாள்.
Image: Facebook
குழந்தையின் கன்னத்தில், யாரோ கடித்த பல் தடம் பதிந்திருந்தது. உடற்கூறு ஆய்வில், குழந்தையின் மண்டை ஓடு உடைந்திருந்ததும், கால் பிசகியிருந்ததும், விலா எலும்புகள், கைகள், கால்கள் என உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது.
புதிய தகவல்கள்
வழக்கு விசாரணை தொடரும் நிலையில், தம்பதியரைக் குறித்த புதிய தகவல்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. ரிங்கல்பென்னும் க்ருணாலும், இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இருவரும் சந்தித்து 10 நாட்களில் அவர்களுடைய குடும்பத்தினர் அவர்களுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர்.
Image: Furnival Chambers
ஆனால், இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுமாம். தன் மனைவி ’ரிங்கு’ அடிக்கடி கோபப்படுவார் என்றும், அவர் கோபப்பட்டால் அவர் எப்படி ரியாக்ட் செய்வது என தான் குழப்பிக்கொள்வதுண்டு என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் க்ருணால்.
மனைவியைக் காப்பாற்ற கடும் முயற்சி
இந்த வழக்கு, Snaresbrook க்ரௌன் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், குழந்தையின் உடலில் காணப்படும் காயங்களுக்குக் காரணம் யார் என்பதைக் கண்டறிய சட்டத்தரணியாகிய Sally O'Neill கடும் முயற்சி செய்துவருகிறார்.
ஆனால், தம்பதியர் உண்மையைச் சொல்ல மறுக்கிறார்கள். ரிங்கல்பென் கோபத்தில் குழந்தையின் கன்னத்தைக் கடித்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், க்ருணால், தன் மனைவி தன் குழந்தையைக் கடித்ததை தான் எப்போதுமே பார்த்ததில்லை என்கிறார்.
தாங்கள், குழந்தையை ஒரு கடவுளைப்போல வளர்த்து வந்ததாகவும், தாங்கள் குழந்தையை அப்படியெல்லாம் தாக்கமாட்டோம் என்றும் கூறும் அவரிடம், நீங்கள் உங்கள் மனைவியை இன்னும் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள், அப்படித்தானே? என்று நேரடியாகவே கேட்டுவிட்டார் சட்டத்தரணி.
இன்னமும், கணவனும் மனைவியும் தொடர்ந்து நாங்கள் குழந்தையைத் தாக்கவில்லை, குழந்தையின் உடலில் ஏற்பட்ட காயங்கள் தற்செயலாக ஏற்பட்டிருக்கலாம் என்றே கூறிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |