புலம்பெயர்ந்த பெண்ணால் கொல்லப்பட்ட சிறுமி வீட்டில் மற்றொரு துயரச் சம்பவம்
பிரான்சில், புலம்பெயர்ந்த பெண்ணொருவரால் பிரெஞ்சு சிறுமி ஒருத்தி துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த வழக்கில் அந்தப் பெண்ணுக்கு ஜாமீனில் வர இயலாத வகையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தச் சிறுமியின் குடும்பத்தில் நிகழ்ந்த மற்றொரு துயரச் சம்பவம் குறித்த செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
புலம்பெயர்ந்த பெண் செய்த பயங்கர செயல்
2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 14ஆம் திகதி, லோலா (Lola Daviet, 12) என்னும் பிரெஞ்சு சிறுமி, பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.

மாலை 3.00 மணியளவில், அவளது வீட்டின்முன், அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த அல்ஜீரியா நாட்டவரான டாபியா (Dahbia Benkired, 27) என்னும் இளம்பெண், லோலாவை சந்தித்துள்ளார். அதற்குப் பின் லோலாவைக் காணவில்லை.

மகளைக் காணாததால் பெற்றோர் பொலிசில் புகாரளிக்க, CCTV கமெராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் டாபியாவை பொலிசார் விசாரிக்க, அவர் லோலாவை வன்புணர்ந்து, சித்திரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
மற்றொரு துயரச் சம்பவம்
இந்நிலையில், தன் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அறிந்த லோலாவின் தந்தை மன வேதனையில் மரணமடைந்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தன் மகளின் மரணச் செய்தியை தாங்க இயலாத லோலாவின் தந்தையான ஜோஹன் (Johan), இரவும் பகலும் குடிக்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளார் லோலாவின் தாயான டெல்ஃபைன் (Delphine Daviet).

தன் மகள் கொல்லப்பட்டதை தாங்க இயலாமல், மன வேதனையில் ஜோஹன் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளார் டெல்ஃபைன்.
இறப்பதற்கு முன், லோலா கொல்லப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசலில் கடிதம் ஒன்றைத் தொங்கவிட்டுள்ளார் ஜோஹன்.

அதில், ’என் செல்ல மகளே, மிகவும் இரக்கமுடையவளான உன் மீது ஏன் இப்படி கொடூரமும், காட்டுமிராண்டித்தனமும் பிரயோகிக்கப்பட்டன என்பது எனக்குப் புரியவில்லை.
உன்னை மீண்டும் சந்திக்க துடிக்கிறேன், இப்படிக்கு, உயிரைப்போல உன்னை நேசிக்கும் உன் அப்பா’ என்று எழுதி, கையெழுத்திட்டுள்ளார் ஜோஹன்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |