4 மாத குழந்தையை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொன்ற தந்தை: பின்னர் எடுத்த விபரீத முடிவு
இந்தியாவில் 4 மாத குழந்தையை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட 4 மாத குழந்தை
மகாராஷ்டிரா, பீட் மாவட்டம் தள்வாடா கிராமத்தில் அமோல் சோனாவனே என்ற தந்தை ஒருவர், தன்னுடைய 4 மாதக் குழந்தையை பாதி அளவு நீர் நிரம்பிய நீல நிற டிரம் ஒன்றில் மூழ்கடித்து கொன்றுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு, அவரும் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் இருவரும் சடலமாக அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த தந்தை ஏற்கனவே உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி
இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையின் போது, குடும்ப தகராறு காரணமாக அமோல் சோனாவனேவும் அவரது மனைவியும் சில நாட்கள் முன்பு தான் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்து பின்னர் அதிகாரிகளால் சரியான நேரத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தந்தை அமோல் சோனாவனே மற்றும் உயிரிழந்த 4 மாத குழந்தை இருவரின் உடலும் தள்வாடா முதன்மை சுகாதார நிலையத்தில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |