14 வயது மகனை விபத்தில் பறி கொடுத்த தந்தை: இறுதி சடங்கில் அவர் செய்த உருக்கமான செயல்
பிரித்தானியாவில் விபத்தில் உயிரிழந்த தனது 14 வயது மகனின் இறுதி சடங்கில் கார்களில் பயணம் செய்வதை நிறுத்துமாறு, வாலிபர்களிடம் துக்கமடைந்த தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விபத்தில் உயிரிழப்பு
பிரித்தானியாவிலுள்ள ஹெட்ஃபோர்டின் என்ற நகரத்திற்கு வெளியே அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் 14 வயதான லூகாஸ் ஜாய்ஸ்(Lukas Joyce) மற்றும் மாணவி கிரிஷ்டி போகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
@Irish Mirror
உடலில் ஏற்பட்ட பலமான காயங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும், கடந்த மார்ச் 10ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
@Irish Mirror
இதனை தொடர்ந்து பிரீடன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட இறுதி சடங்கில் பல மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தனது மகனது இறுதிச் சடங்கில் உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தியதாக ஐரிஷ் மிரர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
உருக்கமான பேச்சு
லூகாஸின் இறுதி சடங்கில் அவரது தந்தை ஜாய்ஸ் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தனது சொற்பொழிவில், தனது ஒரே மகனை இழந்ததை பற்றிக் கூறியுள்ளார்.
@Irish Mirror
"என் மகன் லூகாஸ் எனக்கு ஒரு சிறிய சகோதரர் போன்றவன். அவன் மூன்று அல்லது நான்கு வயதிலிருந்தே என்னுடன் பண்ணையிலோ, பட்டறையிலோ கூடவே இருப்பான்” “நடந்தது உண்மைக்கு மாறானது. என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
"நான் மற்ற மாணவர்களின் பெற்றோரைப் பார்த்தேன், அவர்கள் லூகாஸின் சவப்பெட்டியைச் சுற்றிச் சென்று அதனை பார்த்தார்கள், அது என் மகனாக இருக்கலாம்” என கூறிய அவர் கண்ணீரை துடைத்துக் கொண்டே மேலும் தொடர்ந்தார்.
“இளைஞர்களே, நான் உங்களிடம் கேட்பது நகைச்சுவையல்ல, மிகவும் தீவிரமானது. கார் ஓட்டினால் மெதுவாக பாதுகாப்பாக ஓட்டுங்கள். இல்லையெனில் ஓட்டாதீர்கள். உங்கள் பெற்றோரை நினைத்துப் பாருங்கள். உங்களுக்காக அவர்கள் வாரம் முழுவதும் உழைக்கிறார்கள்.”
“என் மகனுக்கு நடந்ததை பாருங்கள்.நான் இனி ஒரு பெற்றோர் அல்ல, என் மனைவி நெரிங்கா இனி ஒரு பெற்றோர் அல்ல. நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான்." என சோகமாக பேசிய அவர் தனது உரையை முடித்துள்ளார்.
@Irish Mirror
அவர் பேசி முடித்ததும் தேவாலயத்தின் சபை மற்றும் ஃபாதர் சீன் கன்னிங்ஹாம் ஆகியோர் கரகோசம் எழுப்பி வரவேற்பு அளித்ததோடு, அவரின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர்.