கத்திக் குத்து காயங்களுடன் கிடந்த பிள்ளைகள்: வீட்டுக்கு வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரான்சில், வீட்டுக்கு வந்த தந்தை ஒருவர், தனது மூன்று பிள்ளைகளும் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.
கத்திக் குத்து காயங்களுடன் கிடந்த பிள்ளைகள்:
பிரான்சில், பனிச்சறுக்குக்கு பிரபலமான நகரமான Taninges என்னும் நகரில், ஒரு கணவர், மனைவி மற்றும் முறையே 2 மற்றும் 11 வயதுடைய இரண்டு பையன்கள், 13 வயதுடைய ஒரு பெண் என ஒரு குடும்பம் வாழ்ந்துவந்துள்ளது.
[
நேற்று மதியம் 1.00 மணியளவில் வீட்டுக்கு வந்த அந்த தந்தை, தனது மூன்று பிள்ளைகளும் கத்திக்குத்துக் காயங்களுடன் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார்.
பிள்ளைகளைக் கொன்றது அவர்களுடைய தாயாக இருக்கலாம் என்றும், அவர் அந்த பகுதியிலிருக்கும் மலைக்கு ஓடிப்போயிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அந்த பெண் ஒரு கடிதத்தை எழுதிவைத்துச் சென்றுள்ளார். ஆனால், அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைக் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
45 வயதான, பள்ளி ஆசிரியையாக பணியாற்றும் அந்தப் பெண்ணை, பொலிசார் ஹெலிகொப்டர் உதவியுடன் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |