அப்பா முன் பிறவியில் என் பெயர் என்ன தெரியுமா என்று கேட்டு தந்தையை திகிலடைய வைத்த பிரித்தானிய குழந்தை
ஒரு நாள் இரவு, தூங்கும் முன்பு தன் மகளுடன் பேசிக்கொண்டிருந்த பிரித்தானியர், திடீரென அவள் கூறியதைக் கேட்டு திகிலடைந்துள்ளார்.
Dan Schreiber என்ற அந்த பிரித்தானியரிடம், அவரது மூன்று வயது மகள், அப்பா, எனது முன் பிறவியில் நான் வேறொரு குடும்பத்தில் பிறந்திருந்தேன் தெரியுமா என்று கேட்க அச்சமடைந்திருக்கிறார் அவர்.
அது போதாதென்று, அந்த பிறவியில் என் பெயர் Anke, என் தாய் பெயர் Sochi, அப்புறம் நான் இறந்துபோனேன், இப்போது உங்கள் குழந்தையாக பிறந்திருக்கிறேன் என்று சொல்ல, திகிலடைந்த Schreiber, அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லையாம்.
இந்த விடயத்தை Schreiber ட்விட்டரில் பகிர்ந்துகொள்ள, தங்களுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டதாக பல பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஒரு பெண், தனது 3 வயது மகள், ஒரு நாள் தனது பாட்டி தனது தாய் குழந்தையாக இருக்கும்போது உள்ள ஒரு புகைப்படத்தைப் பார்த்து, அந்த படத்திலிருக்கும் பாட்டியைக் காட்டி, அது தான் நான் என்றாளாம். அதைக் கேட்டு அந்த பெண் அதிர்ந்து போயிருக்கிறார். காரணம், ஒரு நாள் அவரது தாய் இந்த மூன்று வயது குழந்தையைப் பார்த்து ஹலோ அம்மா, என்று அழைத்தாராம். அந்த சம்பவம் இந்த குழந்தைக்குத் தெரியாது. இப்போது அவள், தான்தான் அந்த பாட்டி என்று கூற, திகிலில் உறைந்திருக்கிறார் அந்த பெண்.
இன்னொரு பெண், தனது மகன் தனது முற்பிறவி குறித்து தன்னிடம் விளக்கியதாகவும், அத்துடன் தான் தன் தாயின் கருவிலிருக்கும்போது என்ன நடந்தது என்பதை மிகத் தெளிவாக விளக்கியதாகவும், அவன் மிகவும் சிறு குழந்தை என்பதால், அவன் சும்மா கதை விடக்கூட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.