அப்பாவால் என் வாழ்க்கை குழப்பமாகிவிட்டது! நடிகை வனிதா வேதனை
தந்தையின் பேச்சை கேட்டதால் தான் என்னுடைய வாழ்க்கை குழப்பம் ஆகிவிட்டதென நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
என் பெயர் மட்டும் சொல்லவில்லை
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர்,"நான் இப்போது மனதளவில் ரொம்ப வலுவாக இருக்கிறேன். அதற்கு காரணம் என்னுடைய தந்தை தான்.
என் தந்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை பார்த்தேன். அதில் அவர், என் குழந்தைகள் அனைவரும் நான் சொல்லும்படி நடக்கிறார்கள் என்று கூறினார். அப்போது அவர், கவிதா, அனிதா, அருண், ப்ரீதா ஸ்ரீதேவி ஆகியோர் பெயர்களை மட்டும் சொல்லி என் பெயரை மட்டும் சொல்லவில்லை" என்றார்.
அப்பாவால் குழப்பம்
மேலும் அவர்,"நான் அப்பா பேசிய வீடியோவை 10 அல்லது 15 முறையாவது பார்த்திருப்பேன். அதை பார்த்து தான் எனக்கு கோபமும், அழுகையும் வந்தது. அப்போது, அப்பா சொல்வதை கேட்டதால் தான் என் வாழ்க்கை குழப்பமாகிவிட்டது.
என் அப்பா எனக்கு தவறான அறிவுரையை வழங்கினார். அவர் சொல்வதை கேட்டதால் தான் என் வாழ்க்கை குலைந்தது. இப்போது, என்னுடைய நம்பிக்கை தான் எனது பலம்.
விஜயகுமார் என் அப்பா என்று அவர்களால் கூற முடியாது. என் பெயருடன் அவர் பெயரும் திரும்ப திரும்ப வருவதது தான் அவர்களுக்கு நான் கொடுக்கும் இனிய பழிவாங்குதல்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |