லண்டனில் நள்ளிரவில் குத்தி கொல்லப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை! வெளியான புகைப்படம்: அண்டை வீட்டார் சொன்ன தகவல்

Police London Father UnitedKingdom
By Kaviarasan Jul 31, 2021 06:55 PM GMT
Report

லண்டனில் பட்டப்பகலில் இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கத்தி குத்து சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதைக் கட்டுப்படுத்த பொலிசார் அதிரடியாக செயல்பட்டாலும், கத்தி குத்து சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவு Reece Williams என்ற 29 வயது மதிக்கத்தக்க நபர், அடையாளம் தெரியாத நபர்களால் கத்தி குத்தால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடினார்.

லண்டனில் நள்ளிரவில் குத்தி கொல்லப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை! வெளியான புகைப்படம்: அண்டை வீட்டார் சொன்ன தகவல் | Dad Of Two Stabbed To Death In Greenwich

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் விரைந்து வந்துள்ளனர், அப்போது முதலுதலி மருத்துவர்கள் அவருக்கு CPR சிகிச்சை அளித்து, அதன் பின் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அதிகாலை 2.307 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் அவர் தொடர்பான எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து தற்போது அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

லண்டனில் நள்ளிரவில் குத்தி கொல்லப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை! வெளியான புகைப்படம்: அண்டை வீட்டார் சொன்ன தகவல் | Dad Of Two Stabbed To Death In Greenwich

மேலும், Reece Williams-ன் அண்டை வீட்டார் கூறுகையில், என் மகளுக்கு அவரை நன்றாக தெரியும். அவர் ஒரு நல்ல மனிதர், இரண்டு குழந்தைகளை கொண்ட ஒரு அழகான தந்தை. இது போன்ற சம்பவங்கள் இங்கு நடப்பதில்லை, ஆனால் இது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை.

அவர் தனது குடும்பத்திற்காக, கட்டுமான வேலைக்கு சென்று வந்தார். அவருக்கு யாரும் எதிரி இல்லை என்று கூறியுள்ளார்.

லண்டனில் நள்ளிரவில் குத்தி கொல்லப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை! வெளியான புகைப்படம்: அண்டை வீட்டார் சொன்ன தகவல் | Dad Of Two Stabbed To Death In Greenwich

இந்த சம்பவம் தொடர்பாக 20 வயது மதிக்கத்தக்க ஆண், மற்றும் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக யாரேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படியும், அது ரகசியமாக காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US