மகளைக் கொன்று விட்டேன்... வெளிநாட்டில் இருந்து பிரித்தானிய பொலிசாருக்கு தகவல் தெரிவித்த தந்தை
பிரித்தானியாவின் சர்ரே பகுதியில் வைத்து தமது 10 வயது மகளைக் கொன்று விட்டதாக, பாகிஸ்தானில் இருந்து தொடர்புகொண்டு பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார் தந்தை ஒருவர்.
இஸ்லாமாபாத் விமான நிலையம்
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ம் திகதி உர்ஃபான் ஷெரீப் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியதன் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் பிரித்தானியாவில் பொலிசாருக்கு தொடர்பு கொண்டு தமது மகளைக் கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் பின்னரே பொலிசார் சர்ரே பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து சாரா ஷெரீப் என்ற 10 வயது சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளனர்.
42 வயதான ஷெரீப், சாராவின் மாற்றாந்தாய் பெய்னாஷ் பதூல் மற்றும் உறவினர் பைசல் மாலிக் ஆகியோர் இந்த கொலை வழக்கில் தங்களுக்கு தொடர்பில்லை என்றே கூறியுள்ளனர்.
மேலும் சாராவின் கொலையில் பதூலை காப்பாற்ற ஷெரீப் முயன்றுள்ளதாகவே நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. சிறுமி சாரா பல வாரங்களாக கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார் என்றே நீதிமன்றத்தில் அரசு தரப்பு சட்டத்தரணிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
கொலை செய்யும் எண்ணம்
மட்டுமின்றி, சிறுமி சாராவின் உடல் முழுக்க காயங்கள் காணப்பட்டுள்ளது. அவருக்கு உள்க்காயம் மற்றும் வெளிக்காயம் ஏற்பட்டுள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சிறுமியின் உடலில் தீக்காயங்கள் காணப்பட்டுள்ளதுடன், அவளுடைய கைகள் மற்றும் கால்களில் மனித பற்கள் பதிந்த அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சாராவுக்கு அவரது விலா எலும்புகள், தோள்பட்டை, விரல்கள் மற்றும் முதுகுத்தண்டில் 11 தனித்தனி எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அத்துடன் அதிர்ச்சிகரமான மூளைக் காயத்தின் அறிகுறிகள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். உர்ஃபான் ஷெரீப் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றில், மகளை கொலை செய்யும் எண்ணம் இல்லை என்றும், ஆனால் அனைத்தும் எதிராக நடந்துவிட்டது என குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |