என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர்

Kerala Accident
By Karthikraja Oct 12, 2026 11:14 AM GMT
Report

dad will take care of it 19 year old says after killed 3 by speeding mini cooper: கேரளாவில் மதுபோதையில் அதிவேகத்தில் சொகுசுக்காரை ஓட்டி 3 பேரை கொன்ற 19 இளைஞர், இந்த வழக்கை என் தந்தை பார்த்துக்கொள்வார் என திமிராக காவல்துறையிடம் பேசியுள்ளார்.

கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் கொச்சியின் நெடும்பாசேரி விமான நிலையம் அருகே, நேற்று அதிகாலை சுமார் 1:45 மணியளவில் அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார், இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. 

என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் | Dad Will Take Care It 19 Yr Old Say After Killed 3

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரும், சாலையில் தூக்கி வீசப்பட்டனர். மேலும், அந்த கார் இரு சக்கர வாகனத்தை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று நின்றதாகக் கூறப்படுகிறது.

இதில் உயிரிழந்த மூவரும், வயநாடு மடக்கிமலையைச் சேர்ந்த 21 வயதான தேவிகா பாலக்காட்டை சேர்ந்த 22 வயதான கோபிகா, கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 21 வயதான இஜாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் | Dad Will Take Care It 19 Yr Old Say After Killed 3

காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மூவரும், தேநீர் அருந்துவதற்காக விமான நிலையப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் கோபிகாவும் தேவிகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இஜாஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த காரை ஓட்டி வந்தது 19 வயது கல்லூரி மாணவரான சுஹைல் சஜீவ் என தெரிய வந்துள்ளது. 

என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் | Dad Will Take Care It 19 Yr Old Say After Killed 3

காவல்துறையின் விசாரணையில், சுஹைல் சஜீவ் மதுபோதையில் மணிக்கு 125 கிமீ வேகத்தில் சொகுசு காரை ஒட்டி வந்தது தெரிய வந்துள்ளது.

சுஹைல் சஜீவ் மற்றும் அவரது 3 நண்பர்களும், 9;30 மணி முதல் 1;25 வரை 3 வெவ்வேறு மதுபான கூடங்களில் மது அருந்தியது தெரிய வந்துள்ளது.

வழக்கை என் அப்பா பார்த்துக்கொள்வார்

மேலும், 3 பேரை கொன்ற குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல், விமான நிலைய சாலையில் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதில் என்ன தவறு?, இந்த வழக்கை எனது தந்தை பார்த்துக்கொள்வார் என காவல்துறையிடம் பேசியுள்ளார். 

சென்னையை நோக்கி வந்த விமானத்தில் பவர்பேங்க் வெடித்து தீ விபத்து

சென்னையை நோக்கி வந்த விமானத்தில் பவர்பேங்க் வெடித்து தீ விபத்து

சஜீவின் தாயார் கொச்சி மற்றும் ஆலப்புழாவில் ஒரு புகழ்பெற்ற வடிவமைப்பு ஸ்டுடியோ மற்றும் பிராண்டை நடத்தி வருகிறார்.

சமீபத்தில், சுஹைல் சஜீவின் பிறந்தநாளுக்கு அவர் இந்த சொகுசு காரை பரிசளித்ததும், அவர் ஏற்கனவே மணிக்கு 220 கிமீ வேகத்தில் காரை ஒட்டியுள்ளதும் அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. 

பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சுஹைல் சஜீவை கைது செய்துள்ளனர். காரில் அவருடன் பயணித்த நினவ் என்பவரையும் சம்பவதன்றே கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து மதுபானம் வாங்கிய பில் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உடன் மது அருந்திய 2 கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளனர்.

கேரளாவில் சட்டபூர்வமாக மதுபானம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 23 என்பதால், சம்பந்தப்பட்ட மதுபான கூடங்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மாநில கலால் துறை அமைச்சர் எம். லிஜு உத்தரவிட்டுள்ளார். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US