பிரித்தானியாவில் அதி தீவிரமாக பரவும் கொரோனா: புதிய உச்சத்தை தொட்ட தினசரி பாதிப்பு
பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரித்தானியா முழுவதும் விரைவாக பரவி வரும் கொரோனா வைரஸின் விகாரத்தின் பாதிப்பை தடுக்கும் முயற்சியாக, நாடடின் பெரிய பகுதிகள் முழுவதும் கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார்.
டிசம்பர் 26 நள்ளிரவுக்குப் பிறகு, சசெக்ஸ், ஆக்ஸ்போர்டுஷைர், சஃபோல்க், நோர்போக், கேம்பிரிட்ஜ்ஷைர், பெரும்பாலான ஹாம்ப்ஷயர் மற்றும் எசெக்ஸின் எஞ்சியவை அரசாங்கத்தின் 4 அடுக்கு அமைப்பில் (4-tier system) கடுமையான விதிகளை எதிர்கொள்ளும் என்று பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் புதன்கிழமை தெரிவித்தார்.
அத்தியாவசியமற்ற கடைகளை மூட வேண்டும், மேலும் சமூகமயமாக்கல் மேலும் குறைக்கப்படவேண்டும் என்பதற்காக அவர்கள் லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து பகுதியையும் இவற்றில் இணைத்துள்ளனர்.
கடந்த வாரத்தில் பாதிப்பானது 57 சதவீதமாக அதிகரித்ததையடுத்து, வைரஸின் புதிய மாறுபாடு "ஆபத்தான விகிதத்தில் பரவுகிறது" என்று ஹான்காக் கூறினார்.
லண்டன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய விகாரமான திரிபு வேகமாக பரவத் தொடங்கிய நிலையில், வைரஸை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் போராடி வருகிறது.
கடந்த மாதம் நாடுதழுவிய பூட்டுதல் அறிவித்த பின்னரும், வைரஸ் மீண்டும் அதிவேகமாக பரவத் தொடங்கி, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.
சமீபத்திய முடிவின் பொருள் என்னவென்றால், 24 மில்லியன் மக்கள் tier 4, 25 மில்லியன் மக்கள் tier 3, மற்றும் 7 மில்லியன் மக்கள் tier 2 கட்டுப்பாட்டில் இருப்பார்கள். மேலும், தென்மேற்கு கடற்கரையிலிருந்து Isles of Scilly தீவுகளில் வசிக்கும் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் மட்டுமே tier 1 கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.
புதன்கிழமை இங்கிலாந்தில் 39,237 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன, இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பாதிக்கப்பட்ட மிகப்பெரிய தினசரி அதிகரிப்பு ஆகும்.
இந்த மாதத்தில் தொடங்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தால், வசந்த காலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படக்கூடும் என்று அமைச்சர்கள் நம்பிக்கையுடன் இருக்கும்நிலையில், இந்த புதிய வகை கொரோனா வைரஸ் விடயங்களை சிக்கலாக்குகிறது என்று ஹான்காக் எச்சரித்துள்ளார்.
மேலும், "இந்த கிறிஸ்துமஸ் மற்றும் 2021-ஆம் ஆண்டின் தொடக்கமானது கடினமாக இருக்கும்," என்று அவர் கூறினார்.