மல்டிவைட்டமின் மாத்திரைகள் குறித்து தெரியவந்துள்ள கசப்பான உண்மைகள்!
தினமும் மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் (Multivitamin Supplements) எடுத்துக்கொள்வதால் ஒருவரது ஆயுள் அதிகரிக்காது என்றும், மாறாக அவை சீக்கிரம் மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1990களில் இருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக 3,90,124 பேரிடம் ஆய்வு செய்துள்ளனர்.
இது தொடர்பான விவரங்கள் 'Jama Network' இதழில் வெளியாகியுள்ளது.
மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் ஆயுளை நீடிக்க உதவாது மற்றும் இறப்பு அபாயத்தை குறைக்கவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மேலும், மல்டிவைட்டமின்களை எடுத்துக் கொண்டவர்கள், எடுக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, ஆரம்பகால மரணம் ஏற்படும் அபாயம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன்மூலம், மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதை விட ஆரோக்கியமான உணவை உண்பது சிறந்தது என்கிறார் டாக்டர் நீல் பர்னார்ட்(Neal Barnard).
உணவில் நுண்ணிய மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதை விட, உணவில் காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் அதிகம் சாப்பிடுவது நல்லது. இறைச்சி, மது, ஒரே இடத்தில் அமர்வதைக் குறைக்குமாறு பல ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Multivitamin Supplements | Life expectancy | Multivitamin tablets | Vegetables and Fruits | Healthy Life