கூலித் தொழிலாளியின் மகன்... சிறு வயதில் இருந்தே உழைப்பு: இன்று ரூ 3,000 கோடி நிறுவனத்தின் அதிபதி
இஞ்சி பண்ணை ஒன்றில் ரூ 10 தினக் கூலிக்கு வேலை பார்த்த கூலித் தொழிலாளியின் மகன் இன்று ரூ 3000 கோடி நிறுவனத்தின் அதிபதி.
நாளுக்கு ரூ 10 மட்டுமே சம்பளம்
கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா. ஒரு கீழ் நடுத்தர குடும்பம் என்பதால், முஸ்தபாவின் தந்தை அப்பகுதியில் உள்ள இஞ்சி பண்ணை ஒன்றில் தினக் கூலிக்கு வேலை பார்த்து வந்துள்ளார்.
நாளுக்கு ரூ 10 மட்டுமே அவர் சம்பளமாக பெற்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இருந்து வெளியேற, முஸ்தபாவும் அவரது சகோதரர்களும் சிறு வயதிலேயே தங்களால் இயன்ற வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
10 வயதிலேயே முஸ்தபா அவரது கிராமத்தில் விறகு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். அதில் ரூ 150 வரையில் சம்பாதிக்கவும் தொடங்கினார். அப்படியான தொகையில் இருந்து சேமித்த பணத்தில் ஆடு ஒன்றை வாங்கியுள்ளார் முஸ்தபா.
அந்த குடும்பத்திற்கு அந்த ஆடு தான் முதல் சொத்து என்றும் முஸ்தபா பின்னர் தெரிவித்திருந்தார். ஆட்டை விற்று ஒரு பசு மாடு வாங்கிய முஸ்தபா, அதன் பால் விற்று, நாளுக்கு மூன்று வேளை சாப்பிடும் நிலைக்கு உயர்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தான் கொஞ்ச சேமிப்பும், கடன் வாங்கிய தொகையும் சேர்த்து தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். தொடர்ந்து Motorola நிறுவனத்திலும், பின்னர் ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் அமைந்துள்ள Citibank நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.
தோசை மற்றும் இட்லி மாவு
ஒருகட்டத்தில் இந்தியாவுக்கு திரும்பிய முஸ்தபா பெங்களூருவில் உள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் MBA பட்டம் பெற்றார். MBA காலகட்டத்தில் தான் தனது உறவினர்கள் சிலருடன் இணைந்து தோசை மற்றும் இட்லி மாவு தயாரித்து விற்பனை செய்யும் முயற்சியில் களமிறங்கினார்.
அத்துடன், 2005ல் தமது உறவினர்களுடன் இணைந்து காலை உணவு தயாரிக்கு நிறுவனம் ஒன்றை சொந்தமாக துவங்கினார். அதுவே தற்போது பிரபலமடைந்துள்ள iD Fresh Foods நிறுவனம்.
அப்போது இந்திய மதிப்பில் ரூ 50,000 முதலீட்டில் iD Fresh Foods நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மக்களின் நம்பிக்கையை பெற கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றும், சந்தைக்கு அனுப்பும் தோசை மற்றும் இட்லி மாவு பாக்கெட்டுகளில் 90ம் திருப்பி அனுப்பப்படும் கடினமான சூழல் இருந்ததாக முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
படிப்படியாக, iD Fresh தயாரிப்புகளின் விற்பனை உயர்ந்ததுடன் உடனடி காலை உணவு தயாரிப்புகளில் மக்களின் நம்பிக்கை பெற்ற பிரபலமான பெயராகவும் மாறியது.
தற்போது இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டுமின்றி, பிரித்தானியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஓமன் மற்றும் கட்டார் நாடுகளிலும் iD Fresh தயாரிப்புகள் விற்பனையாகின்றன.
iD Fresh நிற்வனத்திற்கு கடந்த ஆண்டு NewQuest நிறுவனம் ரூ 507 கோடி முதலீடு செய்துள்ளது. தற்போது iD Fresh நிற்வனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ 3,000 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |